தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட மஜீட்புர பாடசாலை மாணவர்களுக்கு நேற்று (14) திங்கட்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு வளாகத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது.
மஜீட்புர பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, அல் உஸ்வா உயிர் காப்பு படையின் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான குழுவினரினால் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது.
அல் உஸ்வா உயிர் காப்பு படையினரினால் தாங்கள் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டதாகவும், எதிர் காலத்தில் இப் படையினரின் ஒத்துழைப்பு சகல மாணவர்களுக்கு தேவை எனவும் மஜீட்புர பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கருத்து தெரிவித்தனர்.