Ads Area

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.

 பாறுக் ஷிஹான்.


ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4  மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியிலுள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதன் போது, காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும்  ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில்   சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தைச்சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதே வேளை, இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.


இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச்செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையில் அக்காணொளி அமைந்திருந்ததது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe