இப்றாலெப்பை அப்துல் முனாப்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மாணவர்களுக்கான முன்மாதிரியான நிகழ்வு ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. “சகோதர சங்கமம்” எனும் தொனிப் பொருளில் மௌலவி இப்றாலெப்பை அப்துல் முனாப் அவர்களின் முழுமையான வழிகாட்டலில் அனைத்தின மாணவர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வானது இடம் பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் அம்பாறை வலயத்தில் காணப்படும் காவன்திஸ்ஸ மஹா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை வலய கமு/சது/ கலைமகள் வித்தியாலயம் மற்றும் கமு/சது/ஹோலிகுரோஸ் மஹா வித்தியாலய மாணவர்கள் ஒன்றினைந்து சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக செய்யப்பட்டமை இந்நிகழ்வின் விசேட அம்சமாகும்.
பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ ஆகிய நான்கு சமய மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து தமது கலாசார உணவுகளை பரிமாறிக் கொண்டனர். இந்நிழ்வானது கமு/சது/அல் அர்ஷத் பாடசாலையின் அதிபர் எம்.அப்துர் ரஹீம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மௌலவி இப்றாலெப்பை அப்துல் முனாப் அவர்களின் அழைப்பை ஏற்று சம்மாந்துறை வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைறோஸ்கான் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.எம்.அன்வர் , இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜேஎம்.அஷ்ரப் பலாஹி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.