Ads Area

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலுக்கு ஹரீஸ் கண்டனம்.

ஊடகவியலாளரும் சமூகச்செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.


இத்தாக்குதல் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பைக்குறைக்கும் ஒரு முயற்சியாகும்.


ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு உரிமைக்கும் மீறலைத்தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


ஊடகவியலாளர்கள் சமூகத்தின் கண்காணிப்பாளர்களாக செயற்படுகிறார்கள். அவர்களுக்கெதிரான தாக்குதல்கள், சமூகத்தின் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கக்கூடும். எனவே, இச்சம்பவம் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.


இந்நிலைமையில், சமூகத்தின் ஒற்றுமையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் முக்கியமாகும். 


எனவே, இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் உடனடியாகக்கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இதன் மூலம் ஜனநாயக விரோதிகளின் வன்முறைப் போக்குகளுக்கு வெகுஜனத்தொடர்பு சுதந்திரம் இலக்காகுவதிலிருந்தும் விடுபட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe