இன்று சம்மாந்துறையில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில், போசாக்கு மாதத்தை சிறப்பிக்கும் வகையில், ஒரு பிரம்மாண்டமான போசாக்குணவு கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி Dr Nowshad Musthafa அவர்களின் சீரிய தலைமையில், மேற்பார்வை பொது சுகாதார செவிலியர் (PHNS), SPHI, SPHM, PHM, PHI ஆகியோரின் அசாத்திய முயற்சியாலும், குடும்ப நல உத்தியோகத்தர்களின் தாராளமான நிதி ஆதரவுடனும் இக்கண்காட்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், பெருமளவிலான தாய்மார்களும், அன்னையர் ஆதரவுக் குழுக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்த பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொண்டதுடன், ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டனர்.
தகவல் - MOH Sammanthurai.