Ads Area

சம்மாந்துறையில் அகோர மாரியம்மன் கோயிலில் இடம் பெற்ற பாற்குடபவனி.

 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் கோவிலின் வருடாந்த தீ மிதிப்பு சடங்கின் ஓரங்கமான  பாற்குடபவனி இன்று (1)  செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.


சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி ஆரம்பமாகியது.


ஆலய நிர்வாகிகளான த.அழகு ராஜன் ,எஸ். சசிகுமார் ,உபயகாரர் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் பிரதான கும்பங்களை தாங்க நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தார்கள்.


சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து கோரக் கோயில் அகோரமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்ததும் அங்கு தலைமைப் பூசகர் மாரி மைந்தன் மு.ஜெகநாதன் ஐயாவின் கிரியைகளோடு பாற்குடம் சொரிதல் சிறப்பாக நடைபெற்றது.


அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு பெற்றது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe