திருகோணமலையில் இடம் பெற்ற கட்டழகர் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று தங்கம் பதக்கத்தை வெற்றி கொண்டு கிழக்கு மாகாண கட்டழகராக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த Premium fitness உரிமையாளரான யோஷூவா அவர்கள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் கௌரவிக்கப்பட்டார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய போட்டியாளர்களான நஸ்ரின் சலீம் மற்றும் முஹம்மட் அல்பர் ஆகியோரும் தவிசாளர் அவர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) கட்டழகர் தெரிவுக்கான போட்டி ஒன்று திருகோணமலை st Joseph பாடசாலை அரங்கில் இடம் பெற்றது.
இதில் சம்மாந்துறையைப் பிரதிநிதிப்படுத்தி Premium fitness உரிமையாளர் யோஷூவா, நஸ்ரின் சலீம் மற்றும் முஹம்மட் அல்பர் ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்தனர்.
75kg - 80kg எடை பிரிவுக்கான கட்டளகர் போட்டியில் யோஷூவா முதலாவது இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்து, கிழக்கு மாகாண கட்டழகராக தெரிவு செய்யப்பட்டார்.
துறையூர் விளையாட்டு கழக வீரரான யோஷுவா இதற்கு முன்னரும் பல கட்டழகர் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.