செய்தியாளர் : CMU. தாரிக் முஹம்மத்
தெற்காசிய உயரிய விருதுகளில் ஒன்றான ICONIC AWARD- 2025 விருதினை சம்மாந்துறையில் இயங்கிவரும் Royal Future International campus தனதாக்கி கொண்டது..
பல பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் சிறந்த ஆங்கில ஆசிரியருக்கான விருதினை ( The best English teacher in Sri Lanka) சம்மாந்துறையை சேர்ந்த Royal Future International campus நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரபல ஆங்கில பட விரிவுரையாளர், அறிவிப்பாளர் Mr. M.T. Rumaiz Muhammad பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வு இலங்கையில் இருக்கும் பிரபல கம்பெனிகள் ஊடக நிறுவனங்கள் மற்றும் கற்கை நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் திறமைகளை கௌரவிக்க வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வு (2025/08/20) திகதி Colombo Monarch Imperial Hotel இல் இடம்பெற்றது. Royal future International campus நிறுவனமானது கடந்த வருடம் YouTube நிறுவனத்தின் மூலமாக ஒரு லட்சம் Subscribers வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் (Silver play button ) பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இலங்கையின் முன்னணி செய்தி ஊடகங்களில் ஒன்றான Hiru(sooriyan FM news), BOC Bank மற்றும் இன்னும் பல நிறுவனங்களுக்கும் இந்த உயரிய கௌரவமான ICONIC AWARD வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.