சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் கீழ் மலையடிக் கிராமம்-04 கிராம சேவகர் பிரிவில் 2.27 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அஸ்-ஸமா பாடசாலை அருகாமை வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர்,மாவட்ட செயலக கணக்காளர் ஐ.எம்.பாரீஸ்,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வை.வி.எம்.நவாஸ்,ஏ.சி.எம் சஹீல்,எஸ்.எல்.ஏ நசார் எஸ்.நளீம் ஜனாப், எஸ்.டனோஜன்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான்,தேசிய மக்கள் சக்தியின் வளத்தாப்பிட்டி கிராம அமைப்பாளர் எஸ்.சாந்தகுமார்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள்,தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இவ் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மல்வத்தை-01, மல்வத்தை-02 ஆகிய கிராமங்களிலும் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கத்து.