சம்மாந்துறை அஹதிய்யா பாடசாலைகள் கூட்டிணையம் ஒன்றினைந்து நடாத்திய துஆப் பிரார்த்தனை கெளரவிப்பு ,விருந்துபசார நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை அஹதிய்யா பாடசாலைகள் கூட்டினையத்தின் தலைவர் இஸ்ட், எம்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) பி.எம்.வை அறபாத் முஹைத்தீன்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.சுபைதீன்,சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் MLH.பஷீர் (மதனி),அஹதிய்யா பரீட்சை ஆணையாளர் அஷ்ஷெய்க் யூ.எல் றிபாயுதீன் (ISA),பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் றஸ்மி எம் மூஸா,முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.பி,அஸ்வர்,மாவட்ட அஹதிய்யா சம்மேளன செயலாளர் எஸ்.எல் மன்சூர் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் -01ற்கு பதவியுயர்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை அறபாத் அவர்களுக்கான் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றதோடு மரணித்தவர்களுக்காக துஆ பிராத்தனையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.