Ads Area

சம்மாந்துறை கவிஞர் மருதூர் ஏ. ஹஸன் தலைமையில் இடம்பெற்ற எஸ். ஐ. நாகூர்கனி கவியரங்கு நிகழ்வு.

வலம்புரி கவிதா வட்டத்தின் 114 ஆவது கவியரங்கம் நேற்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் சம்மாந்துறைக் கவிஞர் மருதூர் ஏ. ஹஸன் தலைமையில்  இடம்பெற்றது.


அண்மையில் மரணமடைந்த  வகவ ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி அவர்களை கௌரவித்து நாகூர்கனி நினைவரங்கில் கவியரங்கு நடாத்தப்பட்டது. வலம்புரி கவிதா வட்ட கவியரங்கில் அவர் கலந்து கொண்ட வேளையெல்லாம் அவரை முன்னிலை அதிதியாக மேடையில் அமர்த்தி வகவம் அவருக்கு கௌரவம் வழங்கியுள்ளது. அவர் இல்லாத இந்த 114 ஆவது கவியரங்கிலும் மறைந்த அவரை நினைவுகூர்ந்து அவர் அமர்ந்த ஆசனத்தை மேடையில் காலியாக வைத்து அவருக்கு கண்ணியம் வழங்கியது.


இந் நிகழ்வில் சத்திய எழுத்தாளர் நாகூர்கனியுடன், எம்மைவிட்டும் மறைந்த கலைஞர் எம்.எம்.ஏ. லத்தீப், ஸக்கியா சித்தீக் பரீத் ஆகியோருக்கான மௌனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.


வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வினை நெறிப்படுத்த, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையையும்,  பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரையையும் வழங்கினர்.


கவியரங்கில் கவிஞர்கள் கிண்ணியா அமீர் அலி, பிறைக்கவி முஸம்மில், அருந்தவம் அருணா, எம்.யூ. கமர்ஜான் பீபி, இளநெஞ்சன் முர்ஷிதீன், பவானி  சச்சிதானந்தன், வாழைத்தோட்டம் எம். வஸீர், வாசுகி வாசு, ரவூப் ஹஸீர், கலேவெல ராஜன் நஸீர்தீன், சிந்தனைப்ரியன் முஸம்மில், ராஜா நித்திலன், கலேவெல நபீல் இப்னு இஸ்மாயில், கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ், மஸாஹிரா கனி, தாமரைச்செல்வி, ஏ.பீ.கலீல்தீன், தமிழ்த்தென்றல் அலி அக்பர், ஆர். தங்கமணி, இ. கலைநிலா, தி. ஸ்ரீதரன், எஸ். தனபாலன் ஆகியோர் கவிதை வாசித்தனர். கட்டாரிலிருந்து காப்பியக்கோ ஜின்னா ஷரிபுதீன் நாகூர்கனி அவர்களுக்காக அனுப்பி வைத்த இரங்கற்பாவை கவிஞர் ரவூப் ஹஸீர்  வாசித்தார்.


ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன், ஏ.ஆர்.எம். முஸம்மில், தஸ்கர எம். ராஸிக்,  எம். சிவசண்முகம், சு. ஜெகதீஸ்வரன், சஃபானா புஹாரி, ஏ எல்.எம். அஷ்ரப், ஜொயெல் ஜோன்சன்,  வ. சாந்தகுமார்,  கவிதா இளங்கோ, அமல் பாண்டியன் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.


படங்கள் - சிந்தனைப்ரியன் முஸம்மில்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe