சம்மாந்துறை வீரமுனைக் கிராம பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர் சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
வீரமுனை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மார்க்ஸ்மேன் அணியினர் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தினர் பத்து ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றனர்.
கல்முனை பெஸ்ட் இலவன் அணியினர், 10 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக எம்.ஐ.எம்.இர்ஸாத், மட்டும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை என். நபாத் பெற்றுக் கொண்டார்கள்.
இந்தச் சுற்றுப்போட்டியில் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட மார்க்ஸ்மேன் அணியினருக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பெஸ்ட் இலவன் அணிக்கு 30 ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது. மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை முறையே Trible G மற்றும் யுனிட்டி அணிகள் பெற்றுக்கொண்டன.
இந்த நிகழ்வுக்கான அனுசரணையை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள் வழங்கியிருந்தனர்.