சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட திணைக்களங்களின் தலைவர்களின் ஒன்று கூடலும்,கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (19) சம்மாந்துறை அனைத்து தினைக்கள தலைவர்கள் அமைப்பின் தலைவரும்,சம்மாந்துறை பிரதேச செயலாளருமான எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்க்ளின் தலைமையில் நிந்தவூர் தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற யூ.எம் அஸ்லம் அவர்கள் இவ் அமைப்பினால் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு HOD-சம்மாந்துறை அமைப்பினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் சம்மந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டு அமைப்பின் செயலாளர் சம்மாந்துறை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி பிரபா சங்கர் அவர்களின் நனியுரையுடன் இக் கூட்டம் நிறைவடைந்தது.