Ads Area

"சவூதி நூர்" திட்டம் வெற்றிகரமாக நிறைவு - இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்.

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் டையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலுமுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத்துடைக்கும் நோக்கில், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் ஆகியோரின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் (KSrelief) வழங்கி வரும் மனிதாபிமானப்பணிகளின் தொடர்ச்சியாக, இம்மையம் பார்வையின்மை மற்றும் பார்வையின்மையோடு தொடர்பான நோய்களை எதிர்த்துப்போராடுவதற்கான சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை நிறைவு செய்ததது.  


இத்திட்டமானது, கிழக்கு இலங்கையில் சம்மாந்துறை மற்றும் சுப்ரகமுவ மாகாணத்தில் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளிலுள்ள இரண்டு அரச மருத்துவமனைகளில் செப்டம்பர் 15ம் திகதி முதல் 28ம் திகதி வரை செயற்படுத்தப்பட்டது. 


இத்திட்டம் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது. இந்தத்தன்னார்வாத் திட்டத்தின் போது பின்வரும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன:


கிழக்கு மாகாணம், சம்மாந்துறை பகுதியிலுள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு:


மருத்துவப்பரிசோதனைகள்: 4,336

• லென்ஸ் பொருத்துதல்கள்: 416

• மூக்குக்கண்ணாடி விநியோகம்: 1,028

• அறுவை சிகிச்சைகள்: 428


சபரகமுவ மாகாணம், எம்பிலிபிட்டிய பகுதியிலுள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு::


• மருத்துவப்பரிசோதனைகள்: 4,300

• லென்ஸ் பொருத்துதல்கள்: 407

• மூக்குக்கண்ணாடி விநியோகம்: 1,010

• அறுவை சிகிச்சைகள்: 410


இம்மனிதாபிமான முயற்சியானது, கண் பார்வையை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், பயனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இம்முயற்சியானது, அவர்களை தமது இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பவும், சமூகச்செயற்பாடுகளில் பங்கேற்கவும் உதவுகிறது.


இம்முயற்சியானது மருத்துவ அம்சத்துடன் மட்டும் நின்று விடாமல், கண் நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வுத்திட்டங்கள் மூலம் உள்ளூர் சமூகங்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நிலையான சுகாதாரப்பராமரிப்புக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. 


இம்முயற்சிகள் இலங்கைக் குடியரசின் ஆயிரக்கணக்கான பயனாளிகளிடத்தில் உறுதியான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், அவர்களிடத்தில் மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் பார்வைக்குறைபாடுகளால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும் இது உதவியுள்ளது.


மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் (KSrelief) புள்ளிவிவரங்களின்படி, இம்மையம் இதுவரையில்  இலங்கையில் 25 திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளது. இதன் மொத்தச்செலவு $15 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கும் அதிகமாகும்.


இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா, தனிநபர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் மனிதாபிமான முயற்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவமளித்து வருகிறது. 


குறிப்பாக, சுகாதாரத்துறையில், "சவூதி நூர்" திட்டம் இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள கண் நோயாளிகளுக்குத்தேவையான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் இவ்வுறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe