பாறுக் ஷிஹான்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வருடாந்த இடமாற்றத்திற்கமைய கம்பஹா மாவட்டத்தின் பூகொட பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்றுச்சென்றதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நேற்று (29) புதிய பொறுப்பதிகாரியாக கேகாலை மாவட்டம், மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகக்கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராய்ச்சி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக்கொண்டார்.
கல்முனை பகுதியில் சமூக நலனுக்காக குற்றச்செயல்களைக்கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் போதையொழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் புதிய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் சமூகப்பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், உத்தியொகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இத தவிர, கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் புதிய பொறுப்பதிகாரியாக சுபநேரத்தில் சர்வமதப் பிரார்த்தனையுடன் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி பதவியேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தடன், புதிய பொறுப்பதிகாரியை கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனைக்குழுவின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.