சம்மாந்துறை பிரதேச செயலக இந்து கலாசாரப்பபிரிவின் ஏற்பாட்டில் வாணி விழா நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,பிரதம முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவஸ்ரீ கு.நிமலஸ்வர குருக்களினால் வாணி விழா பூசை இடம்பெற்றதோடு வாணிவிழா சிறப்புரையினை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றிய செயலாளர் சோ.தினேஸ்குமார் அவர்களினால் நிகழ்த்தப்பட்டதோடு நிகழ்வில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.