சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரான கௌரவ ரிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத் தொடரின் நான்காவது சபை அமர்விற்கு முன்னதாக தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனாான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்விகான் நேற்று (2025-10-05) ஏற்பாடு செய்து அதில் தனது வட்டாரப் பிரச்சினைகள் குறித்து மக்களோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.
இக் கலந்துரையாடல் நிகழ்விற்கு வீரமுனைப் வட்டாரத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட சகல துறை சார்ந்த மக்களையும் ஒன்று கூட்டி தனது அரசியல் செயற்பாடு, வட்டாரத்திற்கான தனது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித ஒழிவு-மறைவின்றி மக்களோடு கலந்துரையாடி சபை அமர்வில் பேசவிருக்கும் விடையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்விகானின் இவ்வாறான கலந்துரையாடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். இத்தகைய செயற்பாடானது தனக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய மக்களுக்கும் தனக்குமான நேர்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் அவர் நம்புவதாக தெரிவித்துள்ளார்.