காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பு.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், திமுக கூட்டணி தொண்டர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு கொடியுடன் பங்கேற்பு.
“உணவுப் பொருள் ஏற்றி வந்த லாரிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் 45 பேரை சுட்டுக் கொன்றது இஸ்ரேல் ராணுவம். அது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா?” என முதலமைச்சர் வேதனை தெரிவிப்பு.
"தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்!"
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்தும், உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தும் தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு.