Ads Area

பெரும்போக நெற்செய்கை தொடர்பில் சம்மாந்துறை விவசாயிகளோடு கலந்துரையாடல்.

கல்லோயா ஆற்றுப் பிரிவின் பெரும்போக நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் இன்று(09)  சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது. 


இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கினைப்பில் கீழ் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது. 


இக் கூட்டத்தில் பெரும் போகத்திற்கான விதைப்புகாலம், நிர்விநியோகம், பயிர்காப்புறுதி, விதைக்கும் நெல்லினம், மாடுகளை அப்புறப்படுத்தல், கிளை வாய்க்கால் துப்பரவு, போன்ற விடயங்களுக்கான கால அட்டவணையும் தீர்மானிக்கப்பட்டது. 


மேலும் இக் கூட்டத்தில் கல்முனை நீர்பாசன திணைக்கள பிரிவில் 10786 ஏக்கர் காணிகளும் அக்கரைப்பற்று நீர்பாசன காரியாலயத்தில் வீரயடி பிரிவில் 3897 ஏக்கர் காணிகளும், சம்மாந்துறை நீர்பாசன திணைக்கள பிரிவில் 22256 ஏக்கர் காணிகளும் இம்முறை பெரும்போக விவசாய செய்கைக்காக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. 


இதன்படி கல்முனை நீர்பாசன பிரிவில் எதிர்வரும் 25/10/2025 தொடர்க்கம் 25/11/2025 வரை விதைப்புக் காலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு விதைக்கும் நெல்லினம் 3 தொடர்க்கம் 3 1/2  மாதம் கொண்ட நெல்லினமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அக்கரைப்பற்று நீர்பாசன பிரிவில் 20/10/2025 தொடர்க்கம் 20/11/2025 வரை விதைப்புக் காலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு விதைக்கும் நெல்லினமாக 3 தொடர்க்கம் 3 1/2  மாதம் கொண்ட நெல்லினமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


சம்மாந்துறை நீர்பாசன பிரிவில் 20/10/2025 தொடர்க்கம் 20/11/2025 விதைப்புக் காலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு விதைக்கும் நெல்லினமாக 3 தொடர்க்கம் 3 1/2  மாதம் கொண்ட நெல்லினமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மேற்படி கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,மாவட்ட செயலக பிரதம,,சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம், ,இறக்காமம் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.எம் ஹம்சார்,கல்முனை பிரதேச செயலக உதவிப் திட்டமிடல் பணிப்பாளர்  எம் ஜெளபர்,நீர்ப்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் பொறியிலாளர்கள்,கமநல திணைக்கள உயர் அதிகாரிகள்,விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்,உரக் கூட்டுத்தாபன அதிகாரிகள்,நெல் ஆராய்ச்சி திணைக்கள உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் தலைவர், அதன் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe