(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வசதி குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும்,தூர இடங்களில் சென்று கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்காக வேண்டியும் இஸ்லாமிக் ரிலீப்- கனடா நிறுவனத்தின் சுமார் மூன்று மில்லியன் நிதிப் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று(09) வறுமைக்குட்பட்ட மாணவன் ஒருவனுக்கு துவிச்சக்கர வண்டி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கிணங்க பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜே.ம் ஜெமில் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் ,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.ஏ அஸ்ரப்,திட்ட உத்தியோகத்தர் எம்.எச் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழ்வாதரத்தின் ஊடாக கல்வியை மேம்படுத்துவோம் எனும் செயற்திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்ட்டுக்காக பல்வேறுபட்ட உதவிகள் வழங்கியுள்ள நிலையில் அவ் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.