சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு வீடு கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை மேல் நடவடிக்கைக்காக பரீசிலனை செய்வது சம்மந்தமான உயர்மட்டக் கூட்டம் அண்மையில் (17) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.
ஒன்பது பயனாளிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிய கடித்தத்திற்கு மேல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இக் கூட்டம் கூட்டப்பட்டது.
இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் வி.வாஸித் அஹமட், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல் முஹம்மது அஸ்லம், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.பி.எம் ஹுசைன்,சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம் சாபீர்,ஹெப்ஸோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்,சம்மாந்துறை ஸதகா,ஸகாத் நிதியத்தின் உறுப்பினர்கள், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



