ஜனாதிபதி செயலகத்தினால் சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இம்முறை நிகழ்நிலை( Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கமைய பிரதேச செயலகங்களின் ஊடாக நிகழ்நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவுகள் இடம் பெறுகின்றன.
அந்த வகையில் புளோக் ஜே கிழக்கு-02 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது ஹாசீம் ஹதீஜா உம்மா இருதய சிகிச்சைக்காக தலா இரண்டு இலட்சம் நிதி உதவிக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் நேற்று (18) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி.வாஸீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் வை.பி.எம் நவாஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் ரிபாஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.சித்தி பஸ்ரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

