சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழையினால் சம்மாந்துறை பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து விழுந்து கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுந்த மரங்களை அகற்றும் பணிகள், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் பணிப்புரையின்படி விரைவாக முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட் அவர்களின் நேரடி கண்காணிப்பில், கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு, வீதிகளில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
#தகவல்_மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
📞 0672030800



