Ads Area

முல்லைதீவில் காட்டு வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த 16 விவசாயிகள் பத்திரமாக மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் கிராமங்களைச் சேர்ந்த 16 விவசாயிகள் கல்நாட்டிவெளி வயல் பகுதிக்கு நேற்றய தினம் இரவு(2025.11.26) காவலுக்கு சென்று காட்டு வெள்ளம் காரணமாக  மீள திரும்ப முடியாதிருந்த நிலையில் இருந்தார்கள். 


இவர்களை இன்றைய தினம் பி.ப 2.30 மணியளவில்  கிராம மீனவர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து பத்திரமாக  மீட்டுவந்தனர்.


மாவட்ட ஊடகப்பிரிவு

மாவட்ட செயலகம்

முல்லைத்தீவு.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe