அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தின் போது சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமம்-02 கிராம சேவகர் பிரிவில் ஆபத்தை விளைவிக்க கூடிய மரக்கிளையை அகற்ற முற்பட்ட போது உயர் மின்னழுத்தம் தாக்கி மரணமடைந்த நபருக்கான கொடுப்பனவு அவரின் குடும்பத்திடம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (30) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு காசோலையினை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி.வாஸீத் அஹமட், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம்,கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்,கிராம சேவகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை அதே கிராம சேவகர் பிரிவில்(செந்நெல் கிராமம்-02) மின்சாரம் தாக்கி வீடு சேதம் அடைந்த குடும்பத்திற்கான நஸ்டஈட்டுக் கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



