சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவை பிரிவுகளையும் சார்ந்த நலன்புரி நன்மைகள் சபையினுடைய (அஸ்வெசும) வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் விண்ணப்பித்து பயன்பெறுகின்ற அதேவேளை பயன் பெறாத அனைத்து நபர்களும் தங்களுடைய தகவல்களை மீள்சான்றிதல் அழித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் அதற்குரிய கால அவகாசம் டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே அந்த குறிப்பிட்ட காலப்பகுதிற்குள் உங்களுடைய மீள்சான்றிதல் அளித்தல் நடவடிக்கையினை உங்களுடைய கிராம சேவகப்பிரிவில் அல்லது விதாதா வள நிலையத்தில் அல்லது பதிவு செய்யப்பட்ட Communication நிலையங்களில் அல்லது சுயமாக eservice.wbb.gov.lk இணையதளத்தின் ஊடாக சென்று மீள்சான்றிதல் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அன்பாக வேண்டப்படுகின்றீர்கள்.
2025.12.31ஆம் திகதிற்கு முன்னர் மீள்சான்றிதலித்தல் செய்யப்படாத அனைத்து பயனார்களும் தங்களுடைய நலன்புரி நன்மைககள் சபையினால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் எதிர்காலத்தில் இழக்க நேரிடும் என்பதனையும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்.


