அண்மையில் (18) சம்மாந்துறைப் பகுதியில் இயங்கி வந்த ஒரு அரிசி ஆலையில், சாதாரண சிவப்பு அரிசிக்கு செயற்கை உணவுச் சாயம் பூசி, அதை “கவர்ச்சியான சிவப்பு அரிசி” என விற்பனை செய்யும் மோசடி செயல் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளினால் தற் செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டது.
மோசடியோடு சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. குறித்த அரிசி ஆலை உரிமையாளர் மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏன் இது ஆபத்தானது?
அரிசி ஆலைகளில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்
Synthetic Food Colour (Orange Red) போன்ற சாயங்கள்:
⚠️ சட்டவிரோதமானவை
⚠️ மனித ஆரோக்கியத்திற்கு மிகக் கடும் ஆபத்து விளைவிப்பவை
குறிப்பாக,
- Sunset Yellow (INS 110)
- Carmoisine (INS 122)
போன்ற சாயங்கள் உணவில் கலக்கப்படும்போது,
👶 குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கலாம்
⚡ அதீத சுறுசுறுப்பின்மை (Hyperactivity) ஏற்படலாம்
🩺 நீண்ட காலத்தில் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், ஒவ்வாமை போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது
🔍 போலி சிவப்பு அரிசியை இனங்காண்பது எப்படி?
1️⃣ நீர் சோதனை
அரிசியை நீரில் போட்டால்,
சாயம் பூசப்பட்ட அரிசி நீரை உடனடியாக சிவப்பு / ஆரஞ்சு நிறமாக மாற்றும்.
2️⃣ ஈரக் கையால் தேய்த்தல்
கையில் அரிசியைத் தேய்க்கும் போது
நிறம் கையில் ஒட்டினால் அது செயற்கைச் சாயம்.
3️⃣ தவிடு சோதனை
இயற்கை சிவப்பு அரிசி தவிடு காரணமாக சிவப்பாக இருக்கும்.
நகத்தால் சுரண்டினால் உள்ளே வெள்ளை நிறம் தெரியும்.
ஆனால் சாயம் பூசப்பட்ட அரிசி முழுவதும் நிறமாறி இருக்கும்.
📢 விழிப்புணர்வு செய்தி
- ஆரோக்கியமான சிவப்பு அரிசி என நம்பி நாம் வாங்குவது விஷமாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.
👉 நுகர்வோராகிய நாம்:
- அரிசி வாங்கும் போது தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
- இலாபத்திற்காக மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய மோசடிகளை சமூகத்திற்கு வெளிச்சம் போட வேண்டும்.

