சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழித் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
பாடசாலை அதிபர் எம். அப்துல் றஹீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு விஷேட பேச்சாளராக சம்மாந்துறை தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் அஷ்ரப் ஹாபிழ் நழீமி அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
மேலும் மாணவர்களுக்கான அரபு மொழி பாடநூல்களும் அஷ்ரப் ஹாபிழ் நழீமி அவர்களால் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் அஷ்ரப் பலாஹி அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் - Ibralebbe Abdul Munaf



