Ads Area

சம்மாந்துறை வீரமுனை வட்டாரப் பிரதேசத்தில் தெரு மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம்.

சம்மாந்துறை வீரமுனை வட்டாரப் பிரதேசத்தில் தெரு மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் அண்மையில் வீரமுனை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ரிஸ்விகான் அவர்களினால் நீண்ட கால வேண்டுகோளுக்குப் பின்னர் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வழிகாட்டுதலில்  சம்மாந்துறைப் பிரதேச வீரமுனை வட்டாரத்தில் உள்ள பிரதேசங்களான உடங்கா  - 01, உடங்கா - 02, நெந்நெல் கிராமம் 01 மற்றும் வீரமுனை - 04 ஆகிய பிரதேசங்களில் பொதுமக்கள் பாவனைக்குட்பட்ட மிக அத்தியாவசியமான இடங்களில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


வட்டார மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேசத்தில் உள்ள பல வீதிகளில் பழுதடைந்த மின் விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டும், புதிதாகவும் பல மின் விளக்குகளும்  பொருத்தப்பட்டும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்து.













Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe