Ads Area

இலங்கையின் 78வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்78வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று (4) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில்  உள்ளக விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. 


மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது. 


இந் நிகழ்வுக்கு  உதவி  பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட்,கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா உட்பட மாணவர்கள், பிரதேச செயலக கிளை தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe