Ads Area

78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி .

நாட்டின் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி  இன்று(03)சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 


உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில்  இப் போட்டி  நடைபெற்றது.


இச் சுற்றுபோட்டியில் 8 அணிகள்  கலந்து கொண்டதுடன் அணிக்கு 8 பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக காணப்பட்டது. 


இச் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


மேலும் இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்சா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.சீனத் உம்மா,மற்றும் கிளைத் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


இச் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு கணக்கு பிரிவின் அணியினரும், கிராம சேவகர்கள் அணியும்  மோதின.இதில்  கிராம சேவகர்கள் அணியினர் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இந்த ஆண்டு சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe