Ads Area

கடமையைத் தாண்டிய மனிதநேயம் தீகவாபி வைத்தியசாலைச் சாரதிக்கு கௌரவ அளிப்பு.

 பாறுக் ஷிஹான்.


தீகவாபிய பிரதேச வைத்தியசாலையில் சாரதியாகப் பணி புரியும் பீ.எஸ்.சீ.புஸ்பகுமார  தனது கடமைகளையும் தாண்டி வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைகளுக்காக பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.


பீ.எஸ்.சீ.புஸ்பகுமார தனது சாரதிப் ல்பணிக்கு மேலதிகமாக வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளைத்தானாக முன்வந்து நிவர்த்தி செய்து வருகிறார். 


குறிப்பாக, மின்சார தடங்கல்கள் மற்றும் நீர்க்குழாய் உடைப்புகளை அவ்வப்போது திருத்தியமைத்தல், வைத்தியசாலை வளாகத்தைத் தூய்மைப்படுத்தி அழகுபடுத்துவதுடன், தனது இயலுமையினால் பழுதடைந்த இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் கட்டடப்பகுதிகளையும் அவர் திருத்தியமைத்து வருகிறார்.


வைத்தியசாலை நிருவாகத்தினர் மற்றும் நோயாளர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ள இவரது முன்மாதிரியான செயற்பாடுகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை  (23) இடம்பெற்றது. 


இதன்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் சாரதி புஸ்பகுமாரவின் அர்ப்பணிப்பைப்பாராட்டி சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.


இந்நிகழ்வில், பிராந்திய பிரிவுத்தலைவர்கள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். 


சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களுக்கு இவரது செயல் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe