பாறுக் ஷிஹான்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (4) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக்கடைகளும் பூட்டப்படும் என மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவித்துள்ளார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் நாளைய தினம் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

