நூருல் ஹுதா உமர்.
புனித நோன்பை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அல்-ஹிலால் வீதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதாரப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இப்பரிசோதனை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களின் பங்குபற்றலுடனும் மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் போது உணவகங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவை உடனடியாகத் திருத்தப்பட்டன.
மேலும், வாழைப்பழக் குலைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு களஞ்சிய அறை மிக மோசமான சுகாதார நிலையிலிருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அங்கிருந்த வாழைக்குலைகள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனித நோன்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான திடீர்ப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.




