சம்மாந்துறை அன்சார்.
புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியின் தரம் மற்றும் சுகாதாரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, சம்மாந்துறை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஆரோக்கியமே முதன்மை நோக்கம் எனும் வகையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) கஞ்சி காய்ச்சப்படும் இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து காய்ச்சப்டும் இடங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் பாத்திரங்களின் தூய்மை குறித்து தொடர்ச்சியான சோதனைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே கஞ்சி காய்ச்சுபவர்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பாகவும் உறுதிப்படுத்தி, மூலப்பொருட்களின் தரம் முதல் விநியோகம் வரை அனைத்து நிலைகளிலும் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் - MOH



