Ads Area

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியம் தொடர்பாக நம்பிக்கையாளர் சபை விடுத்துள்ள அறிவிப்பு.



சென்ற 2026.02.14ம் திகதி நடைபெற்ற மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் விஷேட நிருவாகக் குழுவின் தீர்மானத்துக்கமைவாக, மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டு சம்மாந்துறையில் புதிதாக உருவாகி வரும் சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்துக்கும் ஊரின் முச்சபைகளான மஜ்லிஸ் அஷ்ஷுறா, நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா என்பவைகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை எனவும், இதனால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டத்துக்கும் எமது சபைகள் பொறுப்பல்ல எனவும் தீர்மானிக்கப்பட்டு மஜ்லிஸ் அஷஷஷுறாவினால் எமது சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இன்று 2026.02.21ம் திகதி நடைபெற்ற எமது சபையின் வாராந்த அமர்வில் குறித்த விடயம் பரிசீலிக்கப்பட்டு, நம்பிக்கையாளர் சபையின் பராபரிப்பின் கீழுள்ள பள்ளிவாசல்களின் ஜமாஅத் சபைகள் எதுவும் அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதை தவிர்ந்துகொள்வதுடன், அவ்வமைப்பிடம் நிதி மற்றும் ஏனைய உதவிகள் பெறுவதையும் கண்டிப்பாக தவிர்ந்துகொள்ளுமாறு சகல பள்ளிவாசல்களினதும் ஜமாஅத் சபைகளைக் கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எனவே, மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி எமதூரின் ஒற்றுமையை நிலைநாட்ட ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe