சம்மாந்துறை ஜமாலியா சந்தியில் அமைந்துள்ள ஜமாலியா பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் முதியவர்கள் மற்றும் வலது குறைந்தோர்களின் நன்மை கருதி சக்கர நாற்காலி ஒன்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Teaching of Islam நிறுவனத்தில் பணிபுரியும் திரு. புவாட் அவர்களிடம் வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ரிஸ்விகான் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசலானது அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ளமையினால் அங்கு தொழுகைக்காக வரும் வலது குறைந்த பயணிகள் மற்றும் நடக்க சிரமப்படும் முதியோர்களின் நன்மை கருதி அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி சக்கர நாற்காலியின் உதவியோடு பள்ளிவாசலுக்குல் உள்நுழைய உதவியாக குறித்த நாற்காலி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Teaching of Islam நிறுவனத்தில் பணிபுரியும் திரு. புவாட் அவர்கள் ஊடாக வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ரிஸ்விகான் அவர்களால் அப் பிரதேசத்தில் தேவையுடையோருக்கு நீரிணைப்புக்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


