Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலக பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி சபையின் பிரதேச ஒருங்கிமைப்புக் குழு கூட்டம்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழுவின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கினைப்பில் கரையோர பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(16)இடம்பெற்றது. 


இக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 51 கிராம சேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பிரஜா சக்தி 12 திட்ட முன்மொழிவுகளையும் மீளாய்வு செய்து அத் திட்டங்களை பிரஜா சக்தி நிதி ஒதுக்கீட்டின் மூலமும், ஏனைய துறைசார் நிறுவனங்களின் நிதி ஒதுக்கிட்டின் மூலமும் மற்றும்  மத்திய-மாகாண அமைச்சுகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் செய்து முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இக் கூட்டத்தில் ,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம்,அம்பாறை மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்(பிரஜா சக்தி) அதிகாரியே,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், அமைப்பாளருமான.எம்.பி.எம்.நவாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.ஆரிப் உட்பட திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரஜா சக்தி தவிசாளர்கள்,மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe