கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரைக்கு அருகில் கடலில் மிதந்த நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீரில் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு துறைமுக போலீசார் சென்று சடலத்தை மீட்டனர்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி போர்ட் சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

