சம்மாந்துறை அன்சார்.
அம்பாறை மாவட்ட செயலாளராக கடநத 10.07.2023ம் திகதி கடமையேற்று இன்றுடன் இடமாற்றலாகி பொது நிர்வாக அமைச்சுக்கு செல்ல இருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்களை சம்மாந்துறை பிரதேச செயலகம் சார்பாக பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (11) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,உதவி பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட்,கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,நலன்புரி அமைப்ப்பின் பொருளாளர் எம்.டி.எம் மனாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே வேளை,
புதிய அம்பாறை மாவட்ட செயலாளராக இன்றைய தினம் (12) கடமைப் பொறுப்பேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


