Ads Area

இனி சம்மாந்துறையில் மாணவர்களுக்கு இப்படி முடி வெட்டக் கூடாது - சிகை அலங்கார நிலையங்களுக்கு உத்தரவு.

சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை, சமூகசேவைகள் அமைப்புக்களுடன் எடுத்த தீர்மானத்திற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்வது தொர்பில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அனைத்து சிகை அலங்கார நிலையங்களுக்கும் சம்மாந்துறைப் பிரதேச சபை கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.


இதை மீறும் சிகை அலங்கரிப்பாளர்களுக்கான கடை உரிமப்பத்திரம் (Licence) இரத்து செய்யப்பட்டு, அவ்வுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe