ஏ.எல்.எம் ஷினாஸ்.
நோன்பு காலத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
இப்பரிசோதனைகளின் போது உணவுப்பொருட்களின் தரம், சேமிப்பு முறை சுற்றுப்புறத்தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை, சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தவிர, மனிதப்பாவனைக்குதவாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக அதிகபட்ச நடவடிக்கையெடுப்பதற்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



