Ads Area

அம்பாறையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க கடற்படை உதவி.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறையின் பணமைப்பகுதியிலுள்ள இலங்கை கடற்படை அப்பகுதியில் சுற்றித்திரிந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்குத் தேவையான சிகிச்சையளிக்க அண்மையில்  வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு உதவி செய்துள்ளனர்.


தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் மகாநாக முகாம் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை அவதானித்திருந்தது.


இதற்கமைய அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அம்பாறை வனவிலங்கு சுகாதாரப்பிரிவின் சிரேஷ்ட கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் யானைக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையளித்தனர்.


காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வந்த குழுவினருக்கு கடற்படை தேவையான உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe