(சர்ஜுன் லாபீர்)
கிழக்கு மாகாண கலாச்சார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணக்களம்,சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன இணைந்து நடாத்திய "மாகாண இப்தார் நிகழ்வு" சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில் (10) சம்மாந்துறை விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றது.
சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி எம்.பி.ஜி ஸிப்ரான்(நூர்ஹஜ்,ஸஹ்தி)மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இவ் இப்தார் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர கலந்துகொண்டு சிறப்பித்ததோடு கெளரவ அதிதிகளாக கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் விடமுல்ல,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளர் மெனாகா புவிகுமார்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர்,மாவட்ட கணக்காளர் ஐ.எம் பாரீஸ, மாவட்டத்தில் உள்ள பிரதேச செயளாலர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர்கள்,பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் பொலிஸ் மற்றும் இரானுவ உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


