Ads Area

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளருக்கு சம்மாந்துறை தவிசாளர் நேரில் வாழ்த்து: இரு சபைகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு.

 மஜீட். ARM.


நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதையொட்டி வாழ்த்து தெரிவிக்கும் முகமாக, இன்று (11) சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நிந்தவூர் பிரதேச சபைக்கு நேரடியாக வருகை தந்தனர்.


இதன்போது சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இரு சபைகளும் இணைந்து பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe