Ads Area

இம்முறை சம்மாந்துறை நீர்பாசன திணைக்கள பிரிவில் 16775 ஏக்கர் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ள தீர்மானம்.

கல்லோயா ஆற்றுப் பிரிவின் சிறுபோக நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் அண்மையில் (18) சம்மாந்துறை தாறுஸ் ஸலாம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 


இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கினைப்பில் கீழ் அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் துசார பெரேரா தலைமையில் இடம்பெற்றது. 


இக் கூட்டத்தில் சிறு போகத்திற்கான விதைப்புகாலம், நிர்விநியோகம், பயிர் காப்புறுதி, விதைக்கும் நெல்லினம், மாடுகளை அப்புறப்படுத்தல்,கிளை வாய்க்கால் துப்பரவு, போன்ற விடயங்களுக்கான கால அட்டவணையும் தீர்மானிக்கப்பட்டது. 


மேலும் இக் கூட்டத்தில் கல்முனை நீர்பாசன திணைக்கள பிரிவில் 11451 ஏக்கர் காணிகளும் அக்கரைப்பற்று நீர்பாசன காரியாலயத்தில் வீரயடி பிரிவில் 3900 ஏக்கர் காணிகளும், சம்மாந்துறை நீர்பாசன திணைக்கள பிரிவில் 16775 ஏக்கர் காணிகளும் இம்முறை சிறுபோக விவசாய செய்கைக்காக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. என்பதோடு இம்முறை நீர் விநியோகத்தை கருத்திற் கொண்டு 75% ஆன காணிகளுக்கு மாத்திரமே விவசாய செய்கைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதன்படி கல்முனை நீர்பாசன பிரிவு, அக்கரைப்பற்று நீர்பாசன பிரிவு, சம்மாந்துறை நீர்ப்பாசன பிரிவுகளில் எதிர்வரும் 25/03/2026 தொடர்க்கம் 25/04/2026 வரை விதைபவயல்கள்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு விதைக்கும் நெல்லினம் 3 தொடர்க்கம் 3 1/2  மாதம் கொண்ட நெல்லினமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மேற்படி கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் பொறியிலாளர்கள், கமநல திணைக்கள உயர் அதிகாரிகள், விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், உரக் கூட்டுத்தாபன அதிகாரிகள், நெல் ஆராய்ச்சி திணைக்கள உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் தலைவர், அதன் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe