சவுதி அரேபியாவின் மதீனா பகுதியில், தான் பணிபுரியும் வீட்டில் உள்ள குழந்தையை பிலிப்பைன்ஸ் நாட்டுப் பணிப் பெண் ஒருவர் வீட்டுக்குள் வைத்து குத்திக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
குறித்த பெண் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சவுதி சட்டப்படி விசாரணையை முழுமைப்படுத்துவதற்காக இந்த வழக்கு அரசுப் பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு (Public Prosecution) அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

