Ads Area

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு !!

 ( வி.ரி. சகாதேவராஜா)


சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிமனையில் பதவியேற்றனர்.


சுகாதாரம் மற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் முன்னிலையில் பதவியேற்றனர்.


புதிய வைத்தியசாலை குழுவின் தவிசாளராக, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் அமைச்சரினால் நேரடியாக நியமிக்கப்பட்டிருந்தார்.


இப் பதவியேற்பு வைபவத்தில்,   பிரதித் தவிசாளராக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொருளாளராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ. ரூபசாந்தன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe