Ads Area

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய நிரந்தர அதிபராக சம்மாந்துறை நௌஸாத் பொறுப்பேற்பு!

( காரைதீவு நிருபர் சகா) 


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத்  செவ்வாய்க்கிழமை (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 


அச் சமயம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இள வயதிலேயே திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களங்களில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மூதூர், சம்மாந்துறை, கிண்ணியா ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. மேலும், மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகவும் சேவையாற்றியவர். இவர், கல்வி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe