Ads Area

அப்சர் (Absher) செயலி மூலம் உங்களது வாகனத்தை மற்றவர் பயண்படுத்த வாகன உரிமம் வழங்குவது எப்படி? - முழு விவரம்.

சம்மாந்துறை அன்சார்.


சவூதி அரேபியாவில் வாகன உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான வாகனத்தை மற்றவர்கள் (சவூதி குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்கள்) ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை 'அப்சர்' (Absher) தளம் வழியாக எளிதாக வழங்கலாம். எவ்வித காகித வேலைகளும் அல்லது அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இன்றி, ஆன்லைனிலேயே இந்த அனுமதியை வழங்க முடியும்.


பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:


1.  Absher.sa என்ற இணையதளத்தில் உங்கள் கணக்கில் லாக்-இன் (Log in) செய்யவும்.


2.  “My Services” பகுதிக்குச் சென்று, அதில் “Vehicle Services” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


3.  நீங்கள் யாருக்கு உரிமை வழங்க விரும்புகிறீர்களோ, அந்த வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


4.  “Vehicle Authorization Service” என்பதை கிளிக் செய்யவும்.


5.  “Issue Authorization” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


6.  அனுமதியின் வகையைத் தேர்வு செய்யவும்: சவூதிக்கு உள்ளே மட்டும் அல்லது சவூதிக்கு உள்ளே மற்றும் வெளியே என இரண்டையும் தேர்வு செய்யலாம்.


7.  நீங்கள் அதிகாரம் வழங்க விரும்பும் நபரின் இகாமா (Iqama) எண் மற்றும் பிறந்த தேதிஆகியவற்றை உள்ளிடவும்.


8.  விவரங்களைச் சரிபார்த்து, “Issue Authorization” என்பதை அழுத்தவும்.


இந்த செயல்முறை முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபருக்கு வாகன விவரங்கள் மற்றும் காலாவதி காலம் குறித்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும். 


கவனத்தில் கொள்ள வேண்டிய நிபந்தனைகள்:


01. வாகனத்திற்குச் செல்லும் பதிவு (Registration) மற்றும் காப்பீடு (Insurance) ஆகியவை செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.


02. வாகன உரிமையாளர் மற்றும் உரிமம் பெறுபவர் ஆகிய இருவருக்கும் செயலில் உள்ள அப்சர் கணக்கு இருக்க வேண்டும்.


03. அனுமதிக்கான காலாவதி தேதி, வாகனப் பதிவின் காலாவதி தேதி, ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் அல்லது வெளிநாட்டில் இருப்பவர் என்றால் அவர்களின் மறுநுழைவு விசா (Re-entry visa) காலாவதி தேதி ஆகியவற்றை மீறக்கூடாது.


04. இறுதி வெளியேற்ற விசா (Final Exit Visa) வைத்திருப்பவர்களுக்கு வாகன அனுமதி வழங்க முடியாது.


சரியான ஆவணங்கள் மற்றும் அப்சர் கணக்குகள் செயலில் இருப்பதை உறுதி செய்து கொண்டால், இந்த செயல்முறையை மிக விரைவாகவும் சட்டப்பூர்வமாகவும் முடித்துவிடலாம்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe